திருவள்ளூர் சென்னை சில்க்ஸ் கடையில் வாடிக்கையாளர் வாங்கிய பொருளுக்கு MRPயை விட 1 ரூபாய் அதிகமாக வாங்கியதால் வாடிக்கையாளருக்கு 1 இலட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என நுகர்வோர் தீர்பாயம் உத்தரவு.
திருவள்ளூர் மாவட்டம், ஆண்டரசன் பேட்டையை சேர்ந்தவர் சதீஷ், பூவிருந்தவல்லி நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திருவள்ளூரில் உள்ள சென்னை சில்க்ஸில் (பாட்டா) காலனி ஒன்று வாங்கியுள்ளார்.அதில் 279 ரூபாய் MRP இருந்த நிலையில் சென்னை சில்க்ஸில் கூடுதலாக 1 ரூபாய் வைத்து 280 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர்
.இது குறித்து சதீஷ் கேட்கயில் கடை மேலாளர் இஷ்டமிருந்தால் வாங்கி கொள்ளுங்கள் என கூறி அலட்சியம் காட்டியுள்ளார்.இதையடுத்து திருவள்ளூர் நுகர்வோர் தீர்பாயத்தில் சதீஷ் வழக்கு தொடர்ந்தார்
.கடந்த ஒராண்டாக வழக்கு நடந்து வந்த நிலையில் வழக்கை விசாரித்த நுகர்வோர் தீர்ப்பாய தலைவர் லதா மகேஷ்வரன் பாதிக்கப்பட்ட வழக்கறிஞர் சதிஷுக்கு நஷ்ட ஈடுடாக 1 லட்சம் ரூபாயும் வழக்கு நடத்திய செலவாக 5 ஆயிரம் என 1 லட்சத்து 5 ஆயிரம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
பொதுமக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலையை கேட்டால் கேள்வி எழுப்ப வேண்டும் தீர்வு கிடைக்கவில்லை என்றால் வழக்கு தொடுத்து நடவடிக்கை எடுக்க வழிவகை செய்ய வேண்டும் என வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.