2023 ஆண்டிற்கான இளநிலை மருத்துவ படிப்புக்கான ‘நீட் தகுதி தேர்வு’ நாளை மறுநாள் (மே 7-ம் தேதி) தொடக்கம் . தமிழ் நாட்டிலிருந்து 1.5 லட்ச மாணவ – மாணவிகள் பங்கேற்க உள்ளனர் .
இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கு தனித் தனியே நீட் தேர்வு நடறுகிறது.
எம்பிபிஎஸ் ,பல் மருத்துவம், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உள்பட அணைத்து இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (National Eligibility cum Entrance Test) ஆண்டுதோறும் மத்திய அரசின் தேசியத் தேர்வுகள் முகமை நடத்திவருகிறது . இந்தத் தேர்வை எழுதுபவர்கள் மட்டும் தான் இந்தியாவில் மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வில் பங்குபெற முடியும் என்ற நிலை உள்ளது .
இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டிற்கான நீட் தேர்வு மே 7 ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 2 மணிக்கு நடைபெற உள்ளது . நீட் தேர்வை எழுத தமிழ்நாட்டில் 1 .5 லட்சம் மாணவ மாணவிகள் உற்பட இந்தியா முழுவதும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர் .

இந்த வருடம் மாணவர்களுக்கு வசதியாக நீட் தேர்வு இந்தி , ஆங்கிலம் , தமிழ் உற்பட 13 மொழிகளில் நடத்தப்படவுள்ளது . மேலும் நீட் தேர்விற்கான ஹால் டிக்கெட்டுகளை இன்றுமுதல் பதிவிறக்கம் செய்யும் லிங்கை இன்று தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.
இதனை தொடர்ந்து மாணவர்கள் ஹால் டிக்கெட்களை பதிவிறக்கம் செய்யும் வேலையில் ஈடுபட்டுவருகின்றனர் .
முன்னதாக நீட் தேர்வை குறைந்தபட்சம் 15 நாட்கள் ஒத்தி வைக்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை வைத்தனர் . இதற்காக Change.org என்ற இணையத்தில் ஒரு மனுவைத் தொடங்கி , இதுவரை 6,000 மாணவர்கள் இந்த மனுவில் கையெழுத்திட்டிருந்தனர் .
இதற்கு சில மாநிலங்களின் நடைபெறவிருக்கும் வாரிய தேர்வுகளை முக்கிய காரணமாக சுட்டி காட்டி இருந்தனர் . ஜம்மு மற்றும் பஞ்சாப்
ஆகிய மாநிலங்களில் மே 3 ,6 மற்றும் 8 ஆகிய தேதிகளில் வாரியத் தேர்வு நடத்தப்படவுள்ளது . வரும் ஞாயிற்றுக்கிழமை நீட் தேர்வு அன்று மாநில வாரியத் தேர்வு இல்லை என்றாலும், வாரியத் தேர்வுக்கும் நீட் தேர்வுக்கும் இடையே குறைந்தபட்சம் 15 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும் என்பது அவர்களது கோரிக்கை .
Leave a Reply
You must be logged in to post a comment.