ஹோலி பண்டிகை காலத்தில், ரயில் பயணிகளின் வசதிக்காகவும், கூடுதல் நெரிசலைச் சமாளிக்கவும், இந்திய ரயில்வே 540 ரயில் சேவைகளை இயக்குகிறது.
தில்லி-பாட்னா, தில்லி-பாகல்பூர், தில்லி-முசாஃபர்பூர், தில்லி-சஹர்சா, கோரக்பூர்-மும்பை, கொல்கத்தா-பூரி, குவஹாத்தி-ராஞ்சி, புதுதில்லி- ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா, ஜெய்ப்பூர் – பாந்த்ரா முனையம், புனே – தானாபூர், துர்க்-பாட்னா, பரானி-சூரத் போன்ற ரயில் பாதைகளில் நாடு முழுவதும் உள்ள முக்கிய இடங்களை இணைக்க ரயில்களை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளன.

முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் ஏறும் பயணிகளை ஒழுங்குப்படுத்துவதற்கு ரயில்வே பாதுகாப்புப் படையினர் மேற்பார்வை செய்யவுள்ளனர். வரிசையில் நின்று கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக முக்கிய நிலையங்களில் கூடுதல் ரயில் பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். ரயில்கள் சீராக இயங்குவதை உறுதி செய்வதற்காக முக்கிய நிலையங்களில் அதிகாரிகள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.