அரசு தகவல்: மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ஆதாரை பயன்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை என்று மக்களவையில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பான கேள்விக்கு ஒன்றிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜூ சந்திரசேகர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்:

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ஆதார் தகவல்களை பயன்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை என்று இந்திய பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள் தொகை ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் வரை 136 கோடிக்கும் அதிகமான ஆதார் எண்கள் வழங்கப்பட்டுள்ளன. இறப்பு எண்ணிக்கையை சரி செய்த பிறகு உயிரோடு இருப்பவர்களில் ஆதார் எண் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை 130.2 கோடி. இது 2022 ஆம் ஆண்டிற்கான மொத்த மக்கள் தொகையில் 94 சதவீதத்திற்கும் அதிகமாகும். பிறப்பு, இறப்பு சட்டத்தின் அடிப்படையில் மாநில அரசுகளால் நியமிக்கப்பட்ட பதிவாளர்களிடம் இருந்து இறந்தவர்களின் ஆதார் எண்களை பெறுவதற்கான வழிமுறைகள் எதுவும் இல்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Leave a Reply
You must be logged in to post a comment.